Home /News /education /

நீட் 2020 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு - தெரிந்து கொள்வது எப்படி?

நீட் 2020 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு - தெரிந்து கொள்வது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

தேர்வு முடிவுகளை www.ntaneet.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

    நீட் 2020 தேர்வுக்கான இறுதி விடைகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மறு தேர்வு நடத்தப்பட்டது.

    சென்னையில் இரண்டு மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 188 பேர் மறு தேர்வு எழுதினர். மேலும், கடந்த 12-ம் தேதியே நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மறு தேர்வு நடத்தப்பட்டது.

     

    இதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. தேர்வு முடிவுகளை www.ntaneet.ac.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    விடைகளை தெரிந்து கொள்வது எப்படி?

    ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் செல்லவும்.

    அதில் முகப்பு பக்கத்தில் NEET-UG final answer key 2020 என்பதை கிளிக் செய்யவும்.

    நீட் 2020 தேர்வுக்கான விடைகள் PDF ஆக கிடைக்கும்.

    அதில் உங்களது விடைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: NEET Result

    அடுத்த செய்தி