நீட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்...! எப்படி விண்ணப்பிப்பது...?

நீட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்...! எப்படி விண்ணப்பிப்பது...?

Neet Exam 2020 | How to apply for Neet Exam

Neet Exam 2020 | How to apply for Neet Exam

  • News18
  • Last Updated :
  • Share this:
அடுத்த ஆண்டு MBBS,,BDS, படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது.

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வு கட்டாயமாக உள்ளது.

அடுத்த ஆண்டு, மே மாதம் மூன்றாம் தேதி தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று மாலை தொடங்குகிறது. இம்மாதம் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.

எப்படி விண்ணப்பிப்பது..?

தேசிய தேர்வு முகமையின் இணையதளமான  www.ntaneet.nic.in  -க்கு சென்று விண்ணப்பிக்கலாம்.  கேட்கப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள், புகைப்படம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளதால் ஆதார் எண் கட்டாயமாகப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்கள் 1500ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்டவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 1400 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு 800ரூபாய் விண்ணப்ப கட்டணமாக உள்ளது.

ஜனவரி 1-ம் தேதி வரை கட்டணங்களை செலுத்தலாம். ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாக கட்டணத்தை செலுத்த முடியும்.

மேலும் விபரங்களுக்கு கிளிக் செய்க... https://ntaneet.nic.in/Ntaneet/ShowPdf.aspx?Type=E0184ADEDF913B076626646D3F52C3B49C39AD6D&ID=DA4B9237BACCCDF19C0760CAB7AEC4A8359010B0

 

 
Published by:Sankar
First published: