நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் ஆரம்பம்

Neet entrance examநீட் நுழைவு தேர்வு பதிவுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.

நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் ஆரம்பம்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: November 1, 2018, 11:42 AM IST
  • Share this:
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது. 2019-ம் ஆண்டு மே 5-ம் தேதி நீட் தேர்வை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ நடத்த உள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. www.nta.ac.in என்ற இணையதளத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.

நாடு முழுவதும் 2,697 பள்ளிகளில் நீட் தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் நீட் தேர்வு 2019-ம் ஆண்டு மே 6-ம் தேதி  நாடு முழுவதும் நடக்க உள்ளது. அதன்பின் தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் நுழைவு தேர்வின் ஆன்லைன் பதிவு இன்று முதல் ஆரம்பம்


தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அடுத்தாண்டு முதல் தமிழ் வழி வினாத்தாளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணபிக்கும்  போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்களாவன;

> 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
> 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
> ஸ்கேன் செய்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
> ஸ்கேன் செய்த கையெழுத்து படிவம்
> அடையாள அட்டைகளான: ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வு முகமையான என்.டி.ஏ அறிவித்துள்ளது.

Also see...

First published: November 1, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்