பள்ளிகளில் தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடத்தலாம்: மத்திய அரசுக்கு NCERT பரிந்துரை

வாரத்தில் மூன்று நாட்கள் '(odd' & 'EVEN' ) ஒற்றை பட எண் சம எண்  அடிப்படையில்  மாணவர்களுக்கான பதிவின் அடிப்படையில் இரு வேளைகளாக காலை மற்றும் பிற்பகலில் வகுப்புகள் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் தினசரி மூன்று பாடவேளைகள் மட்டும் நடத்தலாம்: மத்திய அரசுக்கு NCERT பரிந்துரை
கோப்புப் படம்
  • Share this:
வாரத்தில் மூன்று நாட்கள் '(odd' & 'EVEN' ) ஒற்றை பட எண் சம எண்  அடிப்படையில்  மாணவர்களுக்கான பதிவின் அடிப்படையில் இரு வேளைகளாக காலை மற்றும் பிற்பகலில் வகுப்புகள் என்.சி.இ.ஆர்.டி பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் , மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக அறிக்கையினை (NCERT) தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் '(odd' & 'EVEN' ) ஒற்றை பட எண் சம எண்  அடிப்படையில்  மாணவர்களுக்கான பதிவின் அடிப்படையில் இரு வேளைகளாக காலை மற்றும் பிற்பகலில் வகுப்புகள் நடத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலாவதாக ஒற்றைப் பட எண்ணில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'சம எண்ணில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் 6 கட்டங்களாக பள்ளிகளை  திறக்கவும் பரிசீலனை முதல் கட்டமாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும் ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதற்கடுத்து, 2 வாரம் கழித்து 3-ஆம் கட்டமாக 6-வது முதல் 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கும் நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, 3ம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கும் 5-ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வம் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வாரங்கள்  கழித்து, 6வது கட்டத்தில், மழலையர்  பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும், கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் தனிமனித  இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று NCERT பரிந்துரைத்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading