நாடு முழுவதும் ஜே.இ.இ பிரதான தேர்வு இன்று நடைபெறுகிறது..

நாடு முழுவதும் உள்ள IIT எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான ஜே.இ.இ பிரதான தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் ஜே.இ.இ பிரதான தேர்வு இன்று நடைபெறுகிறது..
(கோப்பு படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 12:23 PM IST
  • Share this:
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் இரண்டரை லட்சம் பேர் தகுதி மதிப்பெண் பெற்றனர். இவர்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி மற்றும் டிரிபிள் ஐ.டி (IIIT) கல்வி நிறுவனங்களில் பயில தகுதி பெறுவர்.

இவர்களில் 1,60,000 பேர் மட்டும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இத்தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்றால் அவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியை பெறுவர்.

மேலும் படிக்க...திருப்பதி கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் தொடங்கின..


இந்நிலையில் இந்த 1,60,000 பேர் இன்று காலை மற்றும் மதியம் நடைபெறும் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 222 நகரங்களில் 1000 மையங்களில் தேர்வு நடக்கிறது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading