நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நாளை காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் இந்த நுழைவுச் சீட்டை சிரமமின்றி இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும்.
இதையும் வாசிக்க: JEE Main 2022 Results: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..
நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் .
முகப்புப் பக்கத்தில் NEET Admit Card என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு திரையில் தோன்றும். அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
நுழைவுச் சீட்டினை printout எடுத்து தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வு மையங்களில் நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் தொழிற் பழகுனர் மேளா: 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்
விண்ணப்பதாரர்கள் (வழக்கம் - வழக்காறு/ கலாச்சாரம்/ சமயம்) சார்ந்து உணர்வோடு அணிந்து வரும் ஆடைகள் தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்வு நேரம் - பிற்பகல் 2 முதல் 05.20 மணி வரை. நாள்: 17.07.2022
தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும். வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் விவரங்கள், நுழைவுச் சீட்டில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, நுழைவுச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளும் தேர்வர்கள் தெளிவாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.