Joint Entrance Examination Main – 2022 Session 2 July 2022: ஜுலை மாதம் இரண்டாவது ஜேஇஇ அமர்வு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் இன்றைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகம் , மேற்குவங்காளத்தின் ஷிப்பூரிலுள்ள இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், 26 தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIITs), மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஜேஇஇ முதன்மை தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
2022- 23 கல்வியாண்டிற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. முதலாவது அமர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஜுலை 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அமர்வுக்கான தேர்வு ஜுலை மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 501 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் கலந்து கொண்டனர். இதற்கான, உத்தேச விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை முன்னதாக வெளியிட்டிருந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் இன்றைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள் பயிற்சி: அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம்
தேர்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இரண்டு அமர்வுகளில் மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். உதாரணமாக, இரண்டு அமர்வுகளில் தேர்வர் ஒருவர், முதலாவது அமர்வை விட இரண்டாவது அமர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அதுவே தேர்வு மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும்.
தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைய தளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jee