ஹோம் /நியூஸ் /கல்வி /

JEE முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது

JEE முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இரண்டாம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நேற்று (ஜூன் 1 ) முதல் தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

Joint Entrance Examination Main 2022 Session 2 :  இரண்டாம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான (JEE  (Main) – 2022 Session 2 ) விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமார் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தேசிய தொழினுநுட்பக் கழகங்கள், இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள், திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுவாக, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு  வந்த இத்தேர்வு, கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நான்கு முறை நடத்தப்படும்  என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நான்கு முறை நடைமுறை காரணமாக பல சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, 2022 கல்வியாண்டு முதல்  ஆண்டுக்கு இரண்டு முறை (ஏப்ரல், மாத அமர்வு) தொடர்ந்து நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவெடுத்தது.

இதனையடுத்து, ஏப்ரல் மாத அமர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதியோடு நிறைவடைந்ததது. 10 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வு, 20.06.2022ம் தேதி முதல் 29.06.2022-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2 ஷிப்ட்களாக இந்த தேர்வு நடைபெறும். முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல்  பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 2வது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். இதற்கான, அனுமதி நுழைவுச் சீட்டு எப்போதும் வேண்டுமானானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட தேர்வு: 

இரண்டாம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நேற்று (ஜூன் 1 ) முதல் தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு உரிய கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.

ஜுலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளன.

பொது விபரங்கள்:  மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ஏப்ரல்/மே என்ற இரண்டுஅமர்வுகளிலும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் தரவரிசையில் இடம் பெறுவார்கள். 

ஏற்கனவே, முதல் அமர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்கள் பதிவெண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.  தேர்வுத் தாள், மொழி, தேர்வு மையங்கள் அமைந்துள்ள நகரங்கள் ஆகிய விபரங்களை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம். இரண்டாம் அமர்வுக்கான தேவையான கட்டணங்களை  செலுத்த வேண்டியிருக்கும்.

முதல் அமர்வுக்கு விண்ணப்பிக்காமல் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர், வழக்கம் போல் https://jeemain.nta.nic.in என்ற இனையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை இருக்கும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 011- 40759000/011-69227700

Inviting Online Applications for Joint Entrance Examination (Main) – 2022 Session 2 - Reg

First published:

Tags: Education, Jee