• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • கனமழையிலும் 3,5,8,10 மாணவர்களுக்கு தேசிய அடைவுத் தேர்வு- விடுமுறையை மீறி அழைப்பால் பெற்றோர் அதிர்ச்சி

கனமழையிலும் 3,5,8,10 மாணவர்களுக்கு தேசிய அடைவுத் தேர்வு- விடுமுறையை மீறி அழைப்பால் பெற்றோர் அதிர்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கன மழைக்கு இடையே 3 ,5 ,8, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் தேசிய அடைவுத் திறன் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

  • Share this:
    பெரும்பாலான மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென்று தொலைபேசி மூலமாக மாணவர்கள் வர வேண்டுமென கல்வித்துறை அழைப்புவிடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளே நடைபெறாத நிலையில் மத்திய அரசு தேர்வை நடத்துகிறது.

    3, 5 மற்றும் 8, 10 ம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்களுக்கு தேசிய கற்றல் அடைவுத் திறன் தேர்வு, நாளை குறிப்பிட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருக்கிறது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தொலைபேசி மூலமாக ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்து, மாணவர்கள் கண்டிப்பாக தேர்வில் பங்கேற்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    3, 5 மற்றும் 8 மற்றும் 10 ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எந்த அளவிற்கு படித்திருக்கிறார்கள்; அவர்களுடைய திறன் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு, நாளை நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

    இந்த நிலையில் கடும் மழை காரணமாக ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட ஒரு சில மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், நாளை தேசிய அடைவுத் திறன் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டுமென்றும், ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: