அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அங்கீகார வாரியத்தின் (NBA) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தின் பி.இ மின் மற்றும் மின்னணு பொறியியல் (Electrical and Electronics Engineering) பி.இ கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (Computer Science and Engineering) பி.இ வேதிப்பொறியியல் (Chemical Engineering) ஆகியதுறைகளுக்கு தொழில்நுட்ப கல்விக்காக பிரத்யேகமாக இயங்கி வரும் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து நிபுணர்கள் குழு கடந்த மே மாதம் 6, 7, 8ம் தேதிகளில் பொறியியல் புலத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அடுத்த 03 ஆண்டுகளுக்கு என்.பி.ஏ (NBA) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் மற்றும் பதிவாளர் சீதாராமன் ஆகியோர் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.