முகப்பு /செய்தி /கல்வி / CUET UG 2022: விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு, மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

CUET UG 2022: விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு, மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விண்ணப்பங்களை, 2022 மே 31ம் தேதி வரை https://cuet.samarth.ac.in/ என்ற இணையளத்தில் தாக்கல் செய்யலாம். இந்தத் தேதிக்குப்பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

CUET 2022 Application Deadline Extend to 31st May: சில தொழில்நுட்ப சூழ்நிலை காரணமாக, விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இளங்கலை பொது நுழைவுத் தேர்வுக்கான (Common University Entrance Test (UG) - 2022) விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை  மீண்டும் திறந்துள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு (சியுஇடி - யுஜி ) தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம்  6ம் தேதி வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கால அவகாசத்தை கடந்த மே 20ம் தேதி வரை நீட்டித்தது.  மேலும், விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதி இம்மாதம் 31ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவித்தது.

இதுவரை விண்ணப்பித்தவர்களில், கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் டெல்லி பல்கலைகழகத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்தாண்டு, இதே பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இரண்டாவதாக பனராஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு 3.94 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஐடிஐ மதிப்பெண்கள் போதும்; மேற்கு ரயில்வே பிரிவில் 3612 காலியிடங்கள்

இந்த நுழைவுத் தேர்வுக்கு வட மாநிலங்களைச் சேர்த்த மாணவர்களே பெருமளவு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, டெல்லியில் 1.5 லட்சம் பேரும், பீகாரில் 83,672 பேரும், ஹரியானாவில் 69,349 பேரும், மத்திய பிரதேசத்தில் 62,394 பேரும், ராஜஸ்தானில் 48,016 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தென் மாநிலங்களைப் பொறுத்த வரையில், அதிகபட்சமாக கேரளாவில் 40,476 பேரும், தமிழகத்தில் 16,590 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு:  

இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மீண்டும் விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுளளது. இதுவரை, விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பங்களில், திருத்தங்கள் செய்ய நினைப்போர், தேர்வுக் கட்டணம் செலுத்தாதவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.      

விண்ணப்பங்களை, 2022 மே 31ம் தேதி வரை https://cuet.samarth.ac.in/ என்ற இணையளத்தில் தாக்கல் செய்யலாம். இந்தத் தேதிக்குப்பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

CUET (UG) 2022: தமிழகத்தில் வெறும் 16,590 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் https://cuet.samarth.ac.in/ மற்றும் www.nta.ac.in

First published:

Tags: Competitive Exams