Home /News /education /

தொழிலாளர் வர்க்கம் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் - கல்வி அமைச்சர்

தொழிலாளர் வர்க்கம் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் - கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

NEP: 3 முதல் 23 வயது வரையிலான மாணவர்களின் முறையான கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்கிறது.

    21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது தொழிலாளர் வர்க்கத்தினரை தயார்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

    மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் நேற்று, பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பான IFTDO-வின் 49-வது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியின் நிறைவு விழாவில்  உரையாற்றினார்.

    விழாவில் பேசிய அமைச்சர், சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில், செயல்பாட்டாளராகவும், இடையூறு செய்பவராகவும் தொழில்நுட்பம் திகழ்வதாகக் கூறினார். உலகம், அதிவிரைவாக மாறிவருவதைக் கருத்திற்கொண்டு, முழுமையான திறன் செயல்திட்டம் வாயிலாக, 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, நமது தொழிலாளர் வர்க்கத்தினரை தயார்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    அரசுப் பள்ளியில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்துத் துறைகளிலும் திறன் உருவாக்கத்திற்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். திறன் உருவாக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை கண்டறிவதில், இந்திய திறன் உருவாக்க ஆணையத்தின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    CUET PG : முதுநிலை படிப்புகளுக்கு ஜுலை கடைசியில் பொது நுழைவுத் தேர்வு - யுஜிசி

    தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்விக்கும் திறன் பயிற்சிக்குமிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதில் அதன் செயல்திறன் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், 3 முதல் 23 வயது வரையிலான மாணவர்களின் முறையான கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்வதாகக் கூறினார். நாமும், புதிய சிந்தனைகள், திறன் பயிற்சியில் புதுமையான செயல்முறை, மறுதிறன் பயிற்சி மற்றும் முறையான கல்விமுறையில் படிக்காதவர்களுக்கான மறுதிறன் பயிற்சிகளை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: New Education Policy

    அடுத்த செய்தி