Home /News /education /

தமிழ்நாடு கால்நடை பல்கலை. - அமெரிக்க பல்கலை இடையேயான ஒப்பந்தம் நீட்டிப்பு

தமிழ்நாடு கால்நடை பல்கலை. - அமெரிக்க பல்கலை இடையேயான ஒப்பந்தம் நீட்டிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், புதிய தொழில் நுட்பத் தகவல்கள் பரிமாற்றம் இந்த ஒப்பந்தததின் நோக்கமாகும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் ஸ்டில்வாட்டரில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுபிக்கப்பட்டுளளது.

    இதையும் வாசிக்க:  நூலக செயலி, பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்... அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கம்

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தனக்கு தொடர்புடைய துறைகளில் அயல் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் அவ்வப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு   அமெரிக்காவில் ஸ்டில்வாட்டரில் உள்ள ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.            பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், புதிய தொழில் நுட்பத் தகவல்கள் பரிமாற்றம் இந்த ஒப்பந்தததின் நோக்கமாகும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக, நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரையிலான காலத்தில்  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 10  இளங்கலை மாணவர்கள் மூன்று மாதங்களுக்கு ஓக்ல ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பயிற்சி பெற்றுள்ளனர். அதேபோல், ஒக்லஹ்மா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆறு மாணவர்கள் ஜூன் 2019 முதல் 31 நாட்களுக்கு 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவப் பயிற்சி பெற்றனர்.  இருப்பினும், கொரோனா தொற்றுநோயால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பரிமாற்றத் திட்டங்களைத் மேலும் தொடர முடியவில்லை.

    அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலம் 2022ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்க இரண்டு கல்வி நிர்வாகங்களும் முடிவெடுத்துள்ளன. அதற்கான, ஒப்பந்தம் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று கையெழுத்தானது.

    புதிய ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்துதல், மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கூட்டு தொழில்முறை மற்றும் பட்டங்களை வழங்க உரிய திட்டங்களை உருவாக்குதல்; கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறந்த நடைமுறைகளை உருவாக்குதல் போன்றவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Agriculture

    அடுத்த செய்தி