Home /News /education /

நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!

நேற்று ஒரேநாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3,03,000 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22,310 சிறுவர்களுக்கும், விழுப்புரத்தில் 15,266 பேருக்கும், சேலத்தில் 12,970 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,00,000 மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 41,00,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்கி வருகிறது. இது ஒருபுறம் என்றால், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் கேடயமான முகக் கவசத்தை அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதால், தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் அப்போது வலியுறுத்தினார்.

    Also read... 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

    இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய முதல் நாளிலேயே 41 லட்சத்து 30 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 7,70,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜரத்தில் 5,60,000 சிறார்கள், ஆந்திராவில் 4,90,000 சிறார்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உத்தரபிரதேசம், பீகாரில் தலா 1,70,000 பேரும், மேற்குவங்கத்தில் ஒரு லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    Also read... நாளையிலிருந்து அந்தமானுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்!

    தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 3,03,000 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22,310 சிறுவர்களுக்கும், விழுப்புரத்தில் 15,266 பேருக்கும், சேலத்தில் 12,970 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடலூரில் 12,482 பேருக்கும். கன்னியாகுமரியில் 11,579 சிறுவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் 10,766 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Corona Vaccine, School student

    அடுத்த செய்தி