முகப்பு /செய்தி /கல்வி / கடந்த 5 ஆண்டுகளில் 29.7 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவில்லை - மத்திய அரசு

கடந்த 5 ஆண்டுகளில் 29.7 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவில்லை - மத்திய அரசு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Engineering Vacant seats: 1947ல் வெறும் 44 பொறியியல் கல்லூரிகள்  இயங்கி வந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 4,000க்கும் மேலாக வளர்ச்சிப் பெற்றுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 29.76 லட்சம் பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் நிரப்பப்படவில்லை (vacant seats in undergraduate engineering) என்று மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

2017-18 கல்வியாண்டில் 14.6 லட்சம் இளநிலை பொறியியல் இடங்களுக்கு ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்த நிலையில், 7.2 லட்சம் இடங்கள் நிரப்பப்படவில்லை. 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட எண்ணிக்கை முறையே 13.9, 13.2, 12.8, 12.5 லட்சமாக  இருக்கிறது. இந்த ஆண்டுகளில், நிரப்பப்படாத இடங்களின் எண்ணிக்கை முறையே 6.7, 5.8, 5.6, 4.2 லட்சமாக உள்ளது.

மத்திய கல்வி இணை அமைச்சர் பதில்

1947ல் வெறும் 44 பொறியியல் கல்லூரிகள்  இயங்கி வந்த நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 4,000க்கும் மேலாக வளர்ச்சிப் பெற்றுள்ளது. 75 ஆண்டுகால பாதையில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி நிச்சயம்  சாதனையாகும். உலகில் நான்கு இன்ஜினியர்களில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் மட்டும்   பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 42 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019-20-ல் ஒட்டுமொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், பொறியியல் துறையின் பங்கு மட்டும் 17.5 ஆகும்.

இருப்பினும், அண்மைக் காலங்களில் நாட்டின் பொறியியல் கல்வி வீழ்ச்சி அடைந்து வருவதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளை மட்டுமே கொண்டிருந்த இந்திய, இந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அதிக இடமளித்துள்ளது. கிட்டத்தட்ட பொறியியல் மாணவர்களில் 85% பேர் தனியார் கல்லூரியில் படித்து வருவதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

புதிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, இடங்களை வழங்குவதற்கான தகுதி விகிதங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Engineering counselling, Engineering student