Home /News /education /

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் திட்டம்: ரூ.698 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் திட்டம்: ரூ.698 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவிகள் மாதம் ரூ.1000 ஆயிரம்  பெறுவதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு , மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது.  இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு : பெண் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

    மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டுக்கு மட்டும் 698 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என கணக்கிடப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Girl students, Tamil Nadu government

    அடுத்த செய்தி