Home /News /education /

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் கல்வி உதவி திட்டம் செப்டம்பரில் துவங்கும் என தகவல்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் கல்வி உதவி திட்டம் செப்டம்பரில் துவங்கும் என தகவல்

கல்வி உதவி திட்டம்

கல்வி உதவி திட்டம்

Moovalur Ramamirtham Scheme Apply Online 2022 : மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவி திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முதலமைச்சர் துவக்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் 93,000 மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரம் துவக்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே படிப்பை முடித்தவர்களும், தனியார் பள்ளியில் படித்த மாணவிகளும், முதுகலைப் பட்டப்படிப்பில் படிக்கும் மாணவிகளும் என சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியான இளநிலைப் பட்டபடிப்பினை படிக்கும் 93,000 மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

    மேலும் நடப்புக் கல்வியாண்டில் இளநிலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், புதிய பதிவுக்கான சேவை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு புதிய பதிவுக்கான https://penkalvi.tn.gov.in/ தளம் விரைவில் திறக்கப்படும் எனவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவித்துள்ளது.

    ALSO READ | மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்: சாதக, பாதகங்கள் என்ன?

    உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முதலமைச்சர் துவக்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி