Home /News /education /

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை; விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை; விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

Tamil Talent search Exam 2022: தமிழ் மொழியில் ஆர்வமுள்ளவர்கள், மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை பெற வேண்டும் என்று முனைப்புள்ள மாணவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்கலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தப்பட இருக்கும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு  விண்ணப்பிக்க நாளை கடைசிநாளாகும். ஆர்வமுள்ள  மாணவர்கள் உடனடியாக இன்றே விண்ணப்புக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு: பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வரும் அக்டோபர் மாதம் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வை நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.

    யார் விண்ணப்பிக்கலாம்:

    தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள்இந்த திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு நடைபெறும் நாள்:  1.10.2022

    தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.

    இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அம்மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

    இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

    இதையும் வாசிக்கமாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    இத்தேர்விற்கான விண்ணப்பபங்களை dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ/50- சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    நாளைக்குள் (09.09.2022) விண்ணப்பபங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே, தமிழ் மொழியில் ஆர்வமுள்ளவர்கள், மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை பெற வேண்டும் என்று முனைப்புள்ள மாணவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Entrance Exam, Examination, Tamil

    அடுத்த செய்தி