• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தேர்வை எதிர்கொள்வது எப்படி: மாணவர்களுடன் நாளை பிரதமர் மோடி உரை

தேர்வை எதிர்கொள்வது எப்படி: மாணவர்களுடன் நாளை பிரதமர் மோடி உரை

மோடி

மோடி

  • Share this:
    மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில் நாளை நாடு முழுவதுமுள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு குறித்து பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

    பிரதமர் மோடி, 2018-ம் ஆண்டு ’எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தில் பள்ளி மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று விளக்கியிருந்தார். இந்தநிலையில், பள்ளி இறுதித்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை 11 மணிக்கு உரையாட உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் தேர்வை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை பிரதமர் வழங்குவார் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பிரதமருடனான கலந்துரையாடல் குறித்த தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

    மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. மோடியின் பேச்சை, தூதர்ஸன் தொலைக்காட்சி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூட்யூப் பக்கம், நமோ ஆப் ஆகியவற்றின் வழியாக நேரலையில் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: