ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளிடம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். மாநிலத்தில் கொரோனா பரவல், அதன் தாக்கம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பள்ளிகளை திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர்.

  அதன் அடிப்படையில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அதன்படி, பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  இந்நிலையில், தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொடும்பப்பட்டியில் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி அளிக்க வேண்டும் என நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். பள்ளி கல்வித்துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றார். வரும் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  Must Read : இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் - பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உத்தரவு

  இந்லையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 12ஆம் வகுப்பு படிக்கும் 1330 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித்தொகை வழங்கினார். கொளத்தூர் தொகுதியில் 6 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு புத்தக பை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார். அதன்பின்னர் பள்ளி மாணவ மாணவியர், முதலமைச்சருடன் சேர்ந்து குழு படம் எடுத்துக்கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாணவர்களுக்கு வழங்கிய பொருட்களில் “கல்வி சிறந்த தமிழ்நாடு, கலைஞர் பிறந்த தமிழ்நாடு” என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில், கொளத்தூர் தொகுதியில் இருந்து பெறப்பட்ட மனுக்களில், 135 நபர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, தையல் இயந்திரம், ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Anbil Mahesh Poyyamozhi, MK Stalin, School education, School Reopen