அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ கற்றல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் மற்றும் பிழையின்றி எழுதி, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே, இந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் உள்ள வகுப்பறையின் பெஞ்ச்சில் மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கற்றல் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் சோதனை செய்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு கூடத்தை ஆய்வு செய்த முதலமைச்சர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவில், “இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள்.
இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். (1/4) pic.twitter.com/Z5kb4dGbkJ
— M.K.Stalin (@mkstalin) June 13, 2022
ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Must Read : சனாதன தர்மத்துக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேச்சு.. திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, School Reopen, School students