ஹோம் /நியூஸ் /கல்வி /

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

Minority students Scholarship: கல்வி உதவித்தொகைக்கு scholarships.gov.in என்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai |

  studentsசிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் பள்ளிப்படிப்பு (pre-matric scholarship) கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அமிர்த ஜோதி  தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும் (Pre Matric Scholarship), 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் (Post Matric Scholarship) மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (Merit Cum Means Scholarship) இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராாக  அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த  மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  இதையும் வாசிக்கவேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

  தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் இணையதளத்தில் (NSP) இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கல்வி நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதையும் வாசிக்க: புதிதாக தொழிமுனைவோர் கவனத்திற்கு... ரூ.1.5 கோடி வரை அரசு மானியம்

  மேற்படி பள்ளிப்படிப்பு (pre-matric scholarship) கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.10.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15.11.2022 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது].

  இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எண்.32, சிங்கார வேலர் மாளிகை, இரண்டாவது தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Scholarship