முகப்பு /செய்தி /கல்வி / கல்லூரி மாணவர்களுக்கு மேடை பேச்சுப் போட்டி... ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கு மேடை பேச்சுப் போட்டி... ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவிப்பு

பேச்சுப் போட்டி

பேச்சுப் போட்டி

இந்த பேச்சு போட்டியில், பங்கேற்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் மாணவர்களது விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்,

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டிலும் நடத்த இருப்பதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் அறிவித்துள்ளது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும்  பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் தெரிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சரின் 'திராவிட மாடல்' என்ற லட்சியத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் அவர்கள் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பேச்சுப் போட்டி விதிகள்:  போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துக்கொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதற் பரிசுக்கு ரூ. 20,000ம், இரண்டாம்  பரிசுக்கு ரூ. 10,000, மூன்றாம் பரிசுக்கு ரூ. 5000 வழங்கப்படும். மாநில அளவில் முதற் பரிசுக்கு ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ரூ. 50 ஆயிரம், மூன்றாம் பரிசுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற தகுதி உள்ளவர்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம். பங்கேற்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், வருகின்ற 20 ஆம் தேதிக்குள் மாணவர்களது பெயர், மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்பி வைக்க வேண்டிய அஞ்சல் முகவரி :

D.ரவிச்சந்திரன் இ.ஆ.ப., உறுப்பினர் செயலர்,

மாநில சிறுபான்மையினர் ஆணையம்,

முதல் தளம், கலச மஹால்,

புராதன கட்டிடம், சேப்பாக்கம்,

சென்னை 600005

மின்னஞ்சல்: smcelocution@gmail.com ஆகும்.

போட்டிக்கான தலைப்புகள்: 

தமிழ்:

1. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"

2. பெரியாரும் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம்

3. கல்விக் கண்திறந்த கர்மவீரர் காமராசர்

4. அறிஞர் அண்ணாவின் "தமிழ்க் கனவு"

5. கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும்

6. மீண்டும் அண்ணல் காந்தி அவதரிக்க வேண்டும்!

7. வரலாறு தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது!

8. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியா!

9. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

10. தமிழ்நாட்டின் தியாகதீபங்களால் சுடர்விட்ட இந்திய விடுதலைப்போர்!

11. இந்தியா நமது தேசம்! மனித நேயம் அதன் சுவாசம்!!!

12. நேரு கண்ட மதச்சார்பற்ற இந்தியா

13. என் சமகால இளைஞர்களே..?"

14. சமூகநீதி காப்போம். சரித்திரம் படைப்போம்

15. திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி

ஆங்கிலம்: 

1. India of My Dreams

2. Save my Mother Earth!

3. Do we need reservation in Judiciary?

4. The Perils of jobless growth|

5. Serving Humanity is my Religion

6. Independent Judiciary - The watch Dog of Democracy

7. Freedom of Expression and the civilized society

8. Women Empowerment

9. Social Media -A blessing or a curse?

10. Unity Not Uniformity

11. Freedom of Religion - A basic human Right

12. Social justice vs inequality

13. Dravidian Ethos

14. The roll of State in Economic Development

15. Regional aspirations a must for National progress

தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள்  அனைவரும் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நடைபெறும் இப்போட்டிகளில் தங்களது நிறுவனங்களின் மாணவ - மாணவியர் சிறப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்யுமாறு சிறுபான்மையினர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

First published:

Tags: Speech, Tamilnadu govt