ஹோம் /நியூஸ் /கல்வி /

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    2022-23  கல்வியாண்டிற்கான சிறுபான்மை பள்ளிப்படிப்பு  கல்வித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தம், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    நாடு முழுவதும், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுமான்பை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 208-09ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 100% நிதியால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை நேரடி பணமாற்றம் மூலம் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படுகிறது.

    நிபந்தனைகள்:

    பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமான ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

    மேலும், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

    உதவித் தொகை:

    6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஆண்டொன்றுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 வரையிலும், கற்பிப்புக் கட்டணம் ரூ.3,500 (மாதம் 350- 10 மாதத்துக்கு) வரையிலும் வழங்கப்படுகிறது.

    1ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்காமல் பயில்வோருக்கு, பராமரிப்புக்கு கட்டணமாக மாதம் 10 ரூ.100 வீதமும், 6ஆம் ஆம் வகுப்பு வரை வகுப்பு முதல் விடுதியில் தங்கி பயில்வோருக்கு மாதம் ரூ.600 வீதம் வழங்கப்படுகிறது.

    விண்ணப்பம் செய்வது எப்படி?  www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    தேவைப்படும் ஆவணங்கள்:

    • பாஸ் போர்ட் அளவு புகைப்படம்;
    • வருமானச் சான்றிதழ்;
    • சிறுபான்மையினர் என்பதற்கான  வகுப்புச் சான்றிதழ்;
    • ஆதார் எண்;
    • வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC Code;
    • புதுப்பிக்க, முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் சாண்றிதழ்.
    • மேற்படி, தகவல்களுக்கு minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். எனவே, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ/மாணவியர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு (புதியதாக/புதிப்பித்தல் ) கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: Children education, Scholarship