முகப்பு /செய்தி /கல்வி / "6 வயது நிரம்பினால் மட்டுமே 1ம் வகுப்பு"- கல்வித்துறை அதிரடி உத்தரவு

"6 வயது நிரம்பினால் மட்டுமே 1ம் வகுப்பு"- கல்வித்துறை அதிரடி உத்தரவு

காட்சிப் படம்

காட்சிப் படம்

பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 6 வயது நிரம்பினால் மட்டுமே, 1ம் வகுப்பு சேர்க்க முடியும் என்று மத்திய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

3 வயதுக்கும் 8 வயதுக்கும் இடையே உள்ள அடிப்படை கல்விக்கு (Foundational education) தேசிய கல்விக் கொள்கை 2020 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அடிப்படை கல்வி என்பது,  3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் (pre-school education),  2 ஆண்டுகள் கொண்ட முதலாம் (Grade- I) மற்றும் இரண்டாம் வகுப்பு  (Grade - II) கல்வியும் அடங்கும்.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான 3 ஆண்டுகள்  மழலையர் கல்வி கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் மாதம் (20.10.2022) அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை  (National Curriculum Framework for Foundational Stage(NCF-FS))  மத்திய கல்வி அமைச்சகம்  அறிமுகம் செய்தது.

இந்நிலையில், நாட்டில் மழலையர் கல்வி குறிக்கோளை அடைய,  கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை 09.02.2023 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் பள்ளிக் கல்வியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Education, Education department