Home /News /education /

’மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியல் 16-ஆம் தேதி வெளியிடப்படும்’ - அமைச்சர் விஜயபாஸ்கர்..

’மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியல் 16-ஆம் தேதி வெளியிடப்படும்’ - அமைச்சர் விஜயபாஸ்கர்..

மருத்துவ கல்லூரி மாணவர்கள் (கோப்பு)

மருத்துவ கல்லூரி மாணவர்கள் (கோப்பு)

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளதால் இந்த ஆண்டு 304 இடங்களுக்கு குறையாமல் எம்.பி.பி.எஸ் இடங்களும், 91 இடங்களின் பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 395 மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :

மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியல் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மருத்துவபடிப்புக்கான தர வரிசை பட்டியல் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், 18 அல்லது 19-ஆம் தேதி கவுன்சிலிங் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நேரு ஸ்டேடியம் போன்று விசாலமான இடத்தில் வைத்து கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு கவுன்சிலிங் நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

Also read... எஸ்.ஏ.சி கட்சித் தலைவரை விஜய் ஆதரவாளர் மிரட்டியதாக குற்றச்சாட்டு..



இதுவரை 34,427 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும், விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், ஆன்லைன் அல்லாமல் ஆப் லைனில் கவுன்சிலிங் நடத்தவுள்ளதால் 0.1 சதவீதம் கூட ஆள்மாறாட்டாம் நடைபெறாத வகையில் கவனத்துடன் நடத்தப்படும் என தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளதால் இந்த ஆண்டு 304 இடங்களுக்கு குறையாமல் எம்.பி.பி.எஸ் இடங்களும், 91 இடங்களின் பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 395 மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Medical College, Minister Vijayabaskar

அடுத்த செய்தி