• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 25% இட ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

25% இட ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சிபிஎஸ்இ பள்ளிகளை நசுக்குவது அரசின் நோக்கமல்ல, ஆனால் ஏழை மாணவர்களும் அதே தரத்தோடு கல்வி பயில வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    சிபிஎஸ்இ பள்ளிகள் நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து கடும் நிபந்தனைகள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

    சிபிஎஸ்இ பள்ளிகளை நசுக்குவது அரசின் நோக்கமல்ல, ஆனால் ஏழை மாணவர்களும் அதே தரத்தோடு கல்வி பயில வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று கூறினார்.

    அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சியில் கடந்த ஆண்டை காட்டிலும் புதிதாக காணொளி காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் தனியாக ஓராண்டு பயிற்சி மையங்களில் படித்து தேர்வு எழுதுபவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: