5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் இல்லை - அமைச்சர் விளக்கம்!

நடப்பு ஆண்டில் தேர்வு இருக்காது என்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் இல்லை - அமைச்சர் விளக்கம்!
அமைச்சர் செங்கோட்டையன்
  • News18
  • Last Updated: February 21, 2019, 4:41 PM IST
  • Share this:
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணையை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை  அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,


மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-19-ம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு என்று, பெற்றோரும் இளம் மாணவ மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அதிமுக அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணையை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் நடப்பு ஆண்டில் தேர்வு இருக்காது என்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: February 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading