Home /News /education /

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவு எப்போது வெளியாகும்? அமைச்சர் அறிவிப்பு

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவு எப்போது வெளியாகும்? அமைச்சர் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அதில், 10 , 11 ,12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 3 வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றார்.

    மேலும் 8 , 9 ம் தேதி ஹால் டிக்கெட் வாங்க வரும்போது தான் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் விவரம் தெரியும். ஒரு சில இடங்களில் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக பத்திரிக்கை மூலம் தகவல் வந்துள்ளது. தலைமை ஆசிரியர் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்பு என்று சொல்லும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தை குறைப்பதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vijay R
    First published:

    Tags: Public exams

    அடுத்த செய்தி