தற்கொலை தீர்வல்ல - தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்: நீட் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:08 PM IST
தற்கொலை தீர்வல்ல - தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்: நீட் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:08 PM IST
நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை தீர்வாகாது என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

2 முறை நீட் தேர்வு எழுதியும் முருத்துவ சீட் கிடைக்காததால், பெரம்பலூரை சேர்ந்த பேருந்து நடத்துனரின் மகள் கீர்த்தனா, நேற்று விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், வேலூர் பிரசாரத்திற்காக வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், மாணவி தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.


அப்போது, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை திமுக ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை தீர்வல்ல என்று கூறினார்.

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...