ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது? - அமைச்சர் க.பொன்முடி பதில்

தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது? - அமைச்சர் க.பொன்முடி பதில்

அமைச்சர் க.பொன்முடி

அமைச்சர் க.பொன்முடி

கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனைனால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனைனால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முதலமைச்சர் சுகாதாரத் துறையினருடன் ஆலோசித்து அதன் பின்னர் முடிவை தெரிவிப்பார் என்று கூறினார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பாண்டிச்சேரியில் 9-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது, தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் முதலமைச்சரிடம் கொண்டு சேர்த்து தற்போதுள்ள கொரானா சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதலமைச்சர் என்ன வழிவகை கூறுகிறாரோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்து கணிப்பின்படி 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியை நோக்கி வந்துள்ளனர், நடப்பாண்டு அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை அதிகமாக இருக்கும், வருகின்ற மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் மற்றும் இருக்கும் ஆசிரியர்களுக்கான தக்கவைக்க பயிற்சிகள் நடந்து கொண்டு இருக்கும், அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது. துறை ரீதியான ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது, வருகின்ற மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

Read More : நீட் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கான அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் - திருமாவளவன்

9 மற்றும் 10 அதற்கு மேற்பட்டவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 17 சதவீத இடைநிற்றலை 5 சதவீத குறைப்பது தான் எங்களது இலக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்கள், கருத்துகணிப்புகள் எடுக்கப்படவுள்ளது அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பலர் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள், இது குறித்து அதிகாரியிடம் கலந்தாலோசித்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம்.

Must Read : அவர்கள் திராவிட நாடு என்று சொல்லும் வரை, நாங்கள் கொங்கு நாடு என்று சொல்லிக் கொண்டே இருப்போம் - தேவநாதன் யாதவ்

கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தால் பள்ளிகள் திறப்பு எந்த ஆட்சேபணையும் இல்லை, மாணவர்களை பள்ளிக்கு பெற்றோர்கள் தைரியம் வரவேண்டும், இதற்கு சற்று காலம் எடுத்தால் பாண்டிச்சேரியில் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பும், வழிவகைகள் குறித்து உற்று நோக்கி வருகிறோம். அதனடிப்படையில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, College, School Reopen