ஹோம் /நியூஸ் /கல்வி /

புதிய கல்வி கொள்கையை பின்பற்றினால் இடைநிற்றல் அதிகரிக்கும் - அமைச்சர் பொன்முடி

புதிய கல்வி கொள்கையை பின்பற்றினால் இடைநிற்றல் அதிகரிக்கும் - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி பேச்சு

அமைச்சர் பொன்முடி பேச்சு

Ponmudi : புதிய கல்விக் கொள்கையின் படி, பொது நுழைவுத் தேர்வை நடத்தினால், இடைநிற்றல் தான் அதிகரிக்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சார்பில் கற்றல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு பேசினார்.

  தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு, நியூஸ் 18 கற்றல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் பல்வேறு சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன,

  அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் உயர்கல்வி நிறுவனங்களை கவுரவப்படுத்தும் நோக்கில், நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் கற்றல் விருதுகள்  இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டன, இவ்விழா, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், நடைபெற்றது. இதில், புதுமையான முறையில் புவியியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் பிரித்து மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்திய அளவில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழகத்தின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான கற்றல் விருதை தட்டிச்சென்றது. இவ்விருதை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடியிடம் இருந்து, பல்கலை. துணை வேந்தர் செல்வம் மற்றும் பதிவாளர் கணேசன் பெற்றுக்கொண்டனர். இதேபோல பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

  Must Read : சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் - பெரும்பாலான மக்கள் கருத்து

  இந்நிலையில், விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கை நல்லது என்று ஆளுநர் கூறுவதாகவும், பி.ஏ., பி.எஸ்.சி. போன்ற படிப்புகளுக்கு கூட நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள் என்றும் கூறிய அமைச்சர், இதேபோல, மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு போன்றவற்றுக்கு நுழைவுத் தேர்வு நடத்தினால், இடைநிற்றல் அதிகரிக்கும் என்று வேதனை தெரிவித்தார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Education, Entrance Exam, Ponmudi