ஹோம் /நியூஸ் /கல்வி /

கல்லூரி செமஸ்டர் தேர்வு நடக்குமா...? அமைச்சர் பொன்முடி விளக்கம்!

கல்லூரி செமஸ்டர் தேர்வு நடக்குமா...? அமைச்சர் பொன்முடி விளக்கம்!

பொன்முடி

பொன்முடி

ஆன்லைன் தேர்வு முறை தரமானதா என்பது சந்தேகம்தான், நேரடித் தேர்வே மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்றது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வினை தள்ளி வைப்பது, மாணவர்களுக்கு study leave வழங்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளநிலை புள்ளியியல், இளங்கலை பொது நிர்வாகம், வணிகவியல் (கணக்கியல் மற்றும் நிதி) பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் பொன்முடி , மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ஜனவரி 20 நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகள் ஒமைக்ரான் காரணமாக தள்ளி வைக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்களுக்கு study leave வழங்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

Also read... 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி ஆன்லைன் தேர்வு முறை தரமானதா என்பது சந்தேகம்தான், நேரடித் தேர்வே மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Also read... 34 மாணவர்களுக்கு கொரொனோ - அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல்!

மேலும், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டபடி நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Minister Ponmudi