Home /News /education /

அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பொன்முடி

பொன்முடி

பொன்முடி

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 1 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரியும், 33 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளதாகவும், இது தவிர தொழில்நுட்பக் கல்லூரிகளும் உள்ளன என்று கூறினார்.

Also read... 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையிலேயே பொதுத்தேர்வு - தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர்

மேலும், பூந்தமல்லி தொகுதியில் உள்ள அரசுக்கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளது என்றும், அரசுக்கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தும், பிற தொகுதிகளில் புதிய கல்லூரிகளைத் தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Minister Ponmudi, TN Assembly

அடுத்த செய்தி