ஹோம் /நியூஸ் /கல்வி /

ஆகஸ்ட் 16-ல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

ஆகஸ்ட் 16-ல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்பு

பொறியியல் படிப்பு

Engineering counselling : தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவ சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசுக் கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

2022 -23 பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை:

விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் நாள் - 20-06-2022.

விண்ணப்பிக்க கடைசி நாள் / படிவங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் - 19-07-2022.

ரேண்டம் எண் வெளியீடு - 22-07-2022.

சான்றிதழ் சரிபார்ப்பு (TFC) - 20-07-2022 முதல் 31-07-2022 வரை.

தரவரிசை பட்டியல் - 08-08-2022

சிறப்பு கலந்தாய்வு ( மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களின் வாரிசுகள், ராணுவ இடஒதுக்கீடு ) - 16-08-2022 முதல் 18-08-2022.

பொது கலந்தாய்வு - 22-08-2022 முதல்  14-10-2022 வரை.

துணை கலந்தாய்வு - 15-10-2022 முதல் 16-10-2022 வரை.

SC மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 17-10-2022 முதல் 18-10-2022 வரை.

அக்டோபர் 18 முதல் பொறியியல் கலந்தாய்வு முடிவடைகிறது.

முதல் வாரத்திற்குள் 15,000 பேருக்கு கலந்தாய்வு நடைபெறும்.

காலி இடங்கள் கண்டறிவது சிரமமாக உள்ளது. பாடத் திட்டம் தொடங்க தாமதம் ஆகிறது. எனவே முதல் வாரத்திற்குள் 15 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு மாதத்தில் கலந்தாய்வு நடைபெற்று முடிவுகள் வெளிவரும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

இந்த வருடமும் சென்றாண்டு வசூலித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், கொரோனா காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது என்றார்.

Must Read : கேரளா தங்கம் கடத்தலில் பினராயி விஜயன், குடும்பத்தினருக்கு தொடர்பு... ஸ்வப்னோ சுரேஷ் அதிர்ச்சி தகவல்

கலந்தாய்வு முடிந்து 7 நாட்களுக்குள் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடன்,

27-6-22 முதல் விண்ணப்பம் தொடங்கி, 15-7-22 வரை நடைப்பெறும் என்றும், தொடர்ந்து 25 ஜூலை முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Anna University, Engineering counselling, Ponmudi