முகப்பு /செய்தி /கல்வி / உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 3வது இடம்: மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தகவல்

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 3வது இடம்: மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தகவல்

உயர்கல்வி  மாணவர்கள்

உயர்கல்வி மாணவர்கள்

கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய 2020-21-ம் கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக 4 கோடியே 13 லட்சம் பேர் கல்லூரிகளில் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு தழுவிய அளவில் கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 7 புள்ளி 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய 2020-21-ம் கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக 4 கோடியே 13 லட்சம் பேர் கல்லூரிகளில் சேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டைவிட 2 லட்சம்  பட்டியல் இன மாணவர்களும், 3 லட்சம் பழங்குடியின மாணவர்களும், 6 லட்சம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2014-15-ம் ஆண்டு முதலான காலத்தில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 36 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆனால், உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்களின் அளவு 5 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 4 புள்ளி 6 சதவீதமாக குறைந்துள்ளது. பிற சிறுபான்மையின மாணவர்களின் அளவு 2 புள்ளி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 45 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2020-21 கல்வியாண்டில் 70 பல்கலைக் கழகங்களும், 1,453 கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாணவர்களின் எண்ணிக்கையில் 3-வது இடத்தையும், கல்லூரிகளின் எண்ணிக்கையில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Higher education