Home /News /education /

முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரத்தில் தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை மத்திய அரசு நிறைவு செய்ததும், தமிழகத்தில் 5899 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

  • Last Updated :
    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, தமிழ்நாட்டில் ஜனவரி நான்காவது வாரத்தில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் 18 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 21,52,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

    மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, வரும் 10ம் தேதி முதல் தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கும் என்றார்.

    திமுக மற்றும் தமிழக அரசின் முயற்சியால், முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வில் ஒபிசி பிரிவினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை, உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

    அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை மத்திய அரசு நிறைவு செய்ததும், தமிழகத்தில் 5899 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

    Also read... அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை!

    தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை, வரும்10ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

    Also read... சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்றம்!

    கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்கள் என, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Medical counseling

    அடுத்த செய்தி