• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு...! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு...! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பொங்கல் விடுமுறையில் பிரதமர் மோடியின் பரிஷ்கா பி சார்ச்சா நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி வரும் வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் டெல்லியில் கலந்துரையாடும் பரிஷ்கா பி சார்ச்சா எனும் நிகழ்ச்சியை தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பிரத்தியேக யூடியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

    இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பார்ப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.



    ஜனவரி 14-ம் தேதி முதல் தொடர்ந்து பொங்கல் விடுமுறை வருவதால் 16-ம் தேதி அன்று பிரதமரின் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் குழப்பம் ஏற்பட்டது.

    குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் 12-ம் தேதியே சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகைக்காக செல்வார்கள் என்பதால், அந்த மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலையும் இருந்தது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. மாணவர்கள் வீட்டில் இருந்தே பிரதமரின் நிகழ்ச்சியை பார்க்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது” என்று கூறியுள்ளார்.

    முன்னாதாக விடுமுறையில் மாணவர்களை பள்ளிக்கு வரும் உத்தரவை திரும்பப் பெறா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: