பள்ளிகளைத் திறக்க தயாராகும் அரசு: பெற்றோர்கள், மருத்துவர்கள் கருத்து என்ன?

பள்ளி மாணவிகள்

செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள நிலையில் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கும் கருத்துகளைத் தெரிந்துகொள்வோம்.

    கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஒருவனா பிறப்பின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    நோய் பரவல் உச்சத்தில் இருக்கும் தற்போதைய நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக தடுப்பூசி இருக்கின்றது. பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என தமிழக அரசு கருதுகின்றது. இதுகுறித்து மருத்துவ குழுவினருடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் பள்ளிகளைத் திறக்க மருத்துவக் குழுவினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக இன்று சென்னையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் உருமாறிய டெல்டா வகை கொரோனோவால் அதிக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பல வெளிநாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்கலாம் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர். அந்த வகையில் பள்ளி ஆசிரியர்கள், பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மேலும் கைகளை கழுவுவது தனிமனித இடைவெளியை கடை பிடிப்பது போன்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக தெரிவிக்கும் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு வரும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.
    Published by:Karthick S
    First published: