Home /News /education /

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் இதுவரை இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், மாற்று இடங்கள் குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.

    பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் பெட்டி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    நெல்லை டவுன் பகுதியில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்துக்குப் பின், அரசுப் பள்ளிகளில் உள்ள தரமற்ற கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.

    அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டடங்களை இடித்து வ்ருகின்றனர். அத்துடன், ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் உடனடியாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மேலும், பழுதடைந்த கட்டங்களின் நிலை குறித்தும், அதிகாரிகள் அறிக்கை தயார் செய்தனர்.

    இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னையில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

    Read More : இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி?

    அப்போது, தமிழகத்தில் இதுவரை இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், மாற்று இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

    Must Read : தமிழகத்தில் ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அத்துடன், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் பெட்டி அமைத்தல், விலையில்லா பொருட்கள் விநியோகம், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
    Published by:Suresh V
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, School education

    அடுத்த செய்தி