தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது, மாணவர் சேர்க்கை, உள்ளிட்டவை குறித்து, பள்ளி கல்வித்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த சிறப்புக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனிடையே தமிழகத்தில்
12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடைந்து, வெளியிடுவதற்கு தயாராக உள்ளது என்றும், முதலமைச்சரின் உத்தரவு கிடைத்ததும் இம்மாத இறுதிக்குள் 12ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தெரிவித்தார்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் கடைசி நேரத்தில் இந்த முடிவை புதுச்சேரி அரசு கைவிட்டு, பள்ளிகள் திறப்புக்கான தேதி பின்னர் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
Must Read : ஆடி மாதம் வருது.. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுமா...?
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , பள்ளிகள் திறப்பு, 12ம் வகுப்பு முடிவுகள் வெளியிடுவது ஆகியவை குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளது என்றார் . மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், இன்று நடக்கும் நடக்கும் ஆலோசனையில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Read More : சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை : சோதனைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 19 ஆம் தேதி (திங்கட் கிழமை ) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.