உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

பள்ளிக்கல்வித்துறையில் அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களில் மூலம் தர்மபுரி மாவட்டம் கல்வி தேர்ச்சியில் வரிசையில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 9, 2019, 12:43 PM IST
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
Web Desk | news18
Updated: July 9, 2019, 12:43 PM IST
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பழகன், இந்திய அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 25 சதவீதம் என்றுள்ள நிலையில் தமிழகத்தில் 48.6 சதவீதம் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ற அளவில் இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், தர்மபுரியை பொருத்தவரையில் 98.41 சதவீதம் +2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில்வதாகவும் அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார்.

கேள்வி நேரத்தின் பேசிய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், தர்மபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு பேசினார்.


அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையில் அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் மூலம் தர்மபுரி மாவட்டம் கல்வி தேர்ச்சியில் வரிசையில் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

Also see...

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...