நான்காண்டு கால பட்டப் படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டில் மேலே குறிப்பிட்டுள்ள நான்காண்டு கால பட்டப் படிப்பிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வரிசை எண் 1 மற்றும் 2-இல் உள்ள பட்டப் படிப்புகளுக்கு மேல் நிலை (10+2) கல்வித் தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்)
சிறப்புப் பாடமாக புகைப்படம் சார்ந்த தொழில் படிப்புகள் / அதற்கு இணையான படிப்புகள் / மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வரிசை எண் 3-இல் உள்ள பட்டப் படிப்பிற்கு மேல் நிலை (10+2) கல்வித் தேர்ச்சி (இயற்பியல் மற்றும் வேதியியல்)
சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் /அதற்கு இணையான படிப்புகள்/ மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) அல்லது மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் (ECE) ஆகிய பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வரிசை எண் 4 முதல் 6 வரை உள்ள பட்டப் படிப்புகளுக்கு மேல் நிலை (10+2) கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் தொகுப்பேட்டினை பார்க்கவும்.
விண்ணப்பப் படிவத்துடன் தகவல் தொகுப்பு ஏட்டை தபால் வாயிலாக பெற விரும்புவோர் 'Principal, Tamil Nadu Government M.G.R. Film and Television institute, Tharamani, Chennai - 600113' எனும் பெயரில் ரூ.200/க்கான வங்கி வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும்) சாதி சான்றிதழின் நகலுடன் ரூ.60/-க்கான வங்கி வரைவோலையையும் ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் எடுத்து, சென்னையில் வசிப்பவர் எனில் ரூ.30/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டியும், வெளியூரில் வசிப்பவர்கள் எனில் ரூ. 47/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் எனில் ரூ. 71/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட (30 cm x 25 cm) சுயவிலாசமிட்ட உறையுடன் The Principal, Tamil Nadu Government M.G.R. Film and Television Institute. Tharamani,Chennai-600 113 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை
மேலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.cior.tn.gov.in எனும் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவாறு வங்கி வரைவோலையுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் - ரூ.80/- (சாதி சான்றிதழின் நகல் இணைக்கப்பட வேண்டும்).
பிற வகுப்பைச் சார்ந்தவர்கள் - ரூ.200/
இதையும் வாசிக்க: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச பயிற்சி; தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
விண்ணப்பங்கள் பெற நேரில் வர வேண்டாம்
தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
முதல்வர் (பொறுப்பு).
தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
சி. ஐ. டி. வளாகம்,
தரமணி,
சென்னை 600 113
24.06.2022க்கு முன்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
24.06.2022 முதல் 22.07.2022 வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.07.2022 மாலை 5.00 மணிக்குள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College Admission