Home /News /education /

நடனத்திலும் கணிதத்திலும் புகழ்பெற்ற இளம்மேதைகளை BYJU’S Young Genius யின் இந்த வார எப்பிசோடில் காணுங்கள்.!

நடனத்திலும் கணிதத்திலும் புகழ்பெற்ற இளம்மேதைகளை BYJU’S Young Genius யின் இந்த வார எப்பிசோடில் காணுங்கள்.!

Byjus

Byjus

BYJU'S Young Genius | நிலா 12 மாநிலங்களில் முக்கிய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார், மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும், பாரம்பரிய நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்வார் என்று நம்புகிறார். 14 வயதில் இவ்வளவு திறமையுடன், அவர் முன்னேறி ஒரு உயர்ந்த நிலையை அடைவார் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும்.

மேலும் படிக்கவும் ...
குழந்தை மேதைகளைப் பற்றி நாம் நினைக்கும் போது, பொதுவாக அவர்களிடம் இருக்கும் ஒரு தனித்துவமான திறமை அல்லது சாமர்த்தியத்தைப் பற்றி நாம் சிந்திக்கிறோம், அது அவர்களை ஒத்த குழந்தைகளிடமிருந்து தனித்துக் காண்பிக்கிறது. BYJU'S Young Genius யின் இன்றைய எப்பிசோடில், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தங்கள் திறமைகளை நிரூபிக்கும் இரண்டு திறமையான நபர்கள் இடம்பெற்றுள்ளனர். வெவ்வேறு பாணியிலான கிளாசிக்கல் நடனத்தில் அசத்தும் மற்றும் கணிதம் மற்றும் லாஜிக் கேள்விகளுக்கு எளிதில் தீர்வுகாணும், இந்த இளம் பிரமாண்டங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி பார்த்து பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  

இந்த மேதையின் கிளாஸிக் நடன அசைவுகளைக் காண டியூன் செய்யுங்கள்..

கோழிக்கோட்டைச் சார்ந்த 14 வயது நடனக் கலைஞர் நிலா நாத், இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் மோகினியாட்டம் ஆகிய மூன்று நடன வடிவங்களில் தேர்ச்சி பெற்றவர். இவர் குறிப்பாக உணர்வை வெளிப்படுத்தும் மோகினியாட்டத்தில் கவனம் செலுத்துகிறார். உண்மையில், அவர் ஒரே தலைப்பில் இரண்டு வெவ்வேறு பாணியிலான கிளாசிக்கல் நடனம் ஆடியது, பிரபல விருந்தினரான நடன இயக்குனர் கீதா கபூரையே நிலாவைப் பார்த்து பொறாமைப்படச் செய்தது, நிலாவின் திறமையைக் கண்டு அவர் வியந்தார்.

நிலாவின் நடனக் கதை ஒரு சோகமான தொடக்கத்தைக் கொண்டிருந்தது, அவள் மூன்று வயதிலேயே தன் தாயை இழந்தாள். அவரது தாயார் ஒரு நடனக் கலைஞராக இருந்தார், ஆனால் அதை அவரால் மேலும் தொடர முடியவில்லை, மேலும் நிலா ஒரு நடனக் கலைஞராக வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய கனவாக இருந்தது. நிலாவின் தாயின் கனவை நிறைவேற்றுவதற்கு அவரின் தந்தை உறுதியளித்தார், மேலும் அவரது அறையில் காணப்படும் எண்ணற்ற கோப்பைகளும், அவரது ஆசிரியர்களின் ஊக்க வார்த்தைகளுமே அவரது திறமைக்குச் சான்றாகும்.

நிலா 12 மாநிலங்களில் முக்கிய கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார், மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும், பாரம்பரிய நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்வார் என்று நம்புகிறார். 14 வயதில் இவ்வளவு திறமையுடன், அவர் முன்னேறி ஒரு உயர்ந்த நிலையை அடைவார் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இந்த இளம் கணித வழிகாட்டியுடன் லாஜிக் கேள்விகளுக்குத் தீர்வு காண்போம்..

10 வயதாகும் மும்பையைச் சேர்ந்த கியான் சாவந்த் சிறு பையனாகத் தெரியலாம் - ஆனால் அவரது அளவைக் கண்டு ஏமாற வேண்டாம். பெரும்பாலான பெரியவர்கள் தலையைச் சொறிந்து கொள்ளும் பிரச்சனைகளைக்கூட கியானால் தீர்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் கணிதம், அறிவியல் மற்றும் லாஜிக் ஆகியவற்றில் ஒலிம்பியாட் சாம்பியனாக உள்ளார், மேலும் அவர் ‘லிட்டில் மாஸ்டர் ஆஃப் லாஜிக்ஸ்’ என்று கௌரவிக்கப்பட்டார் மற்றும் The Child Prodigy இதழின் படி 2021 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 100 குழந்தைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.

அவர் செட்டில் நிதானமாக உலா வருவதையும், போர்டில் ஒரு சிக்கலான சமன்பாட்டைத் தீர்ப்பதையும் பார்க்கும்போது அவரின் திறமை நம்மை வியக்க வைக்கிறது. சுயமாகக் கற்கும் ஆற்றல் கொண்ட கியான் தனது ஆறு வயதிலிருந்தே வெவ்வேறு போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார், மேலும் அவரின் தாயார் அவரிடம் கருத்து கேட்கத் தொடங்கியபோது அவருக்கு லாப நஷ்டத்தையும் கற்பிக்கத் தொடங்கினார்.

அவரது திறமைகளை மதிப்பிடுவதற்கு, கணிதத் துறையில் பல சாதனைகளைப் படைத்தவருமான மற்றும் கணிதத் திறன்களுக்காக மனிதக் கால்குலேட்டராக அறியப்படுபவருமான நீலகண்ட பானு பிரகாஷ் இந்த எப்பிசோடில் பங்கேற்றார். கியானை நோக்கி தான் கேட்ட கேள்விகளுக்குத் தெள்ளத் தெளிவாகப் பதிலளித்த அவரின் திறமையைக் கண்டு பானு பிரகாஷும் வியந்தார், மேலும் இந்த இளம் மேதைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பதாகக் கணித்தார்

ஒரே எப்பிசோடில் இவ்வளவு திறமைகளைக் காட்சிப்படுத்தும், #BYJUSYoungGenius2 இன் இந்த பதிப்பு பல நிலைகளில் நமக்கு உத்வேகம் அளிக்கிறது. முழு எப்பிசோடையும் இங்கே காணுங்கள். 
Published by:Selvi M
First published:

Tags: BYJU'S Young Genius

அடுத்த செய்தி