Home /News /education /

Medical Students Protest: சீனாவில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்கள் போராட்டம்

Medical Students Protest: சீனாவில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்கள் போராட்டம்

Medical Students

Medical Students

சீனாவின் உயர்க் கல்வி நிறுவனங்களில் சேர்வது குறித்து எச்சரிக்கையோடு இருக்குமாறு பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு  ஆலோசனை வழங்கியுள்ளது

  • News18
  • Last Updated :
    கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக சீனாவில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் மருத்துவப்படிப்பைத்  தொடர வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. 2020  ஜனவரி மாத இறுதியில்  கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அங்கு தீவிரமடையத் தொடங்கியது.  இதனையடுத்து, சீனாவில் உயர்க்கல்வியில் படித்து வந்த எண்ணற்ற இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

    2020 நவம்பர் மாதம் கோவிட் 19 தொற்று நோய் பாதிப்பின் காரணமாக, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய தூதரக விசாக்கள், அதிகாரபூர்வ விசாக்கள்  நீங்கலாக மற்ற அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்த, தடை தற்போது வரை தொடர்கிறது. எனவே,  சீனாவில் இருந்து இந்திய வந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். ஆன்லைன் முறையில் படிப்பைத் தொடர முயற்சி செய்து வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல்கலைக்கழக மானியக் குழு: 

    இந்நிலையில், இந்த கல்வியாண்டிற்கு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்கை தொடர்பான அறிவிப்புகளை  சீனாவில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து,  சீனாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வது குறித்து எச்சரிக்கையோடு இருக்குமாறு பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு  ஆலோசனை வழங்கியுள்ளது.



    அதில், " முன் அனுமதியின்றி ஆன்லைன் முறையில் மட்டும் பெறப்படும் கல்வித் தகுதிகளை பல்கலை மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழவும் அங்கீகரிக்காது. எனவே, வரும் காலங்களில்    அனைத்தையும் முழுமையாக பரிசீலனை செய்து மாணவர்களை தங்கள் உயர்க்கல்வியைத்  தேர்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தது.

    இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவில் மருத்துவப் பயிற்சியை (Practical Training) மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்கள் கல்வித் தகுதியை அங்கீகரிக்க வேண்டும்  என்றும்  தெரிவிக்கின்றனர். இந்திய அரசு இதற்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்று, சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக, உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, ஆயிரக்கணக்கான மருத்துவ  மாணவர்கள் இந்தியா வரவழைக்கப்பட்டனர். இவர்களின் படிப்பு தடைபட்ட நிலையில்,  இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர உடனடியாக காணப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education, Online class

    அடுத்த செய்தி