தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2,650 இடங்கள் என, இளநிலை மருத்துவப் படிப்பில் (MBBS) மொத்தம் 6,999 இடங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களை சேர்க்க தரவரசைப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இருக்கும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில், இராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாக கலந்தாய்வு நடக்கிறது. அசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 28, 29ம் தேதிகளில் தேதிகளில் நேரடியாக நடைபெறுகிறது. இந்த பிரிவில் 436 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக 30ஆம் தேதி கலந்தாய்வு முதல் கலந்தாய்வு நடக்கும். பி.டி.எஸ் படிப்பிற்கு 30ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. இப்படிப்பில் 1,930 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Must Read : நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை நீக்கிய சமந்தா - காரணம் இது தானாம்
இந்த கலந்தாய்வு கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. முதல்முறையாக மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு, என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு போல ஆன்லைனில் நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுதொடர்பான முழு விவரங்கள்
www.tnmedicalselection.org,
www.tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.