நீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்!

மாதிரி படம்

நீட் தேர்வில் தகுதி பெற முடியாத மாணவர்கள் இருப்பினும் சுகாதார மற்றும் மருத்துவத் துறையில் உள்ள படிப்புகளையே படிக்க விரும்புகிறனர்.

 • Share this:
  இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது 12-ம் வகுப்பிற்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) அதாவது நீட் தேர்வை நாடு முழுவதும் கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள் எழுதுகிறர்கள். ஆனால் இதில் சராசரியாக சுமார் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

  நீட் தேர்வில் தகுதி பெற முடியாத மாணவர்கள் இருப்பினும் சுகாதார மற்றும் மருத்துவத் துறையில் உள்ள படிப்புகளையே படிக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் போட்டி நிலை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் போதிய அளவு கிடைக்காததால், பல மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பு கனவை கைவிட வேண்டியிருந்தது. இதனிடையே நீட் தேர்வு இன்றி மாணவர்கள் படிக்க கூடிய சில மருத்துவ படிப்புகள் பற்றி பார்க்கலாம்.

  பி.டெக் பயோமெடிக்கல் (B.Tech in Biomedical)

  பி.டெக் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் என்பது நான்கு ஆண்டு கால இளங்கலை படிப்பாகும். இதை 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அறிவியல் ஸ்ட்ரீமில் சமமான பட்டம் பெற்றவர்கள் படிக்கலாம். இந்த கோர்ஸ் பயோமெடிக்கல் டெக்னீசியன், பயோமெடிக்கல் இன்ஜினியர் மற்றும் பயோகெமிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. பயோமெடிக்கல் இன்ஜினியர்கள் தொழில்நுட்பத்துடன் மருத்துவத்தின் தொடர்புகளை ஆய்வு செய்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயைத் தடுப்பார்கள். வலுவான தொழில்நுட்பம், உயிர் தகவல்தொடர்பு அமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த படிப்பு உதவுகிறது.

  பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் இன் மைக்ரோபயாலஜி (Bachelor of Science in Microbiology)

  மூன்றாண்டு அடங்கிய இந்த படிப்பு சுற்றுச்சூழலில் உள்ள நுண்ணிய உயிரினங்களின் துறையை கற்பிக்க கூடியது. இந்த படிப்பு நாம் வாழும் சூழல் மற்றும் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள், புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிரிகளின் பகுதியில் நுண்ணுயிரியலாளரின் ஆராய்ச்சியை உள்ளடக்கியது. இந்த துறையில் நிலையான ஆராய்ச்சி மற்றும் நிறைய முன்னேற்றங்கள் உள்ளன. ஆராய்ச்சி ஆய்வகங்கள், உணவுத் தொழில்கள், விவசாயம் போன்றவற்றில் பாக்டீரியாலஜிஸ்ட், வைராலஜிஸ்ட், பயோகெமிஸ்ட் உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகளை இந்த படிப்பு பெற்று தருகிறது.

  பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் இன் பயோடெக்னாலஜி (Bachelors of Science in Biotechnology)

  இந்த படிப்பின் காலம் 3 ஆண்டுகள். இந்த படிப்பு பூமியின் சேவைக்கு தயாரிப்புகளை உருவாக்க அல்லது கண்டுபிடிப்பதற்கான உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த ஆய்வை கற்று தருகிறது. நுண்ணுயிரிகளில் மரபணு கையாளுதல் பற்றிய ஆய்வையும் இந்த படிப்பு உள்ளடக்கியது. இந்த படிப்பை படித்த உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள் பொதுவாக ஆராய்ச்சி நிறுவனங்கள் / ஆய்வகங்களில் வேலையில் இருக்கிறார்கள். அக்ரி, ஃபார்மா, உணவு, வேதியியல் போன்ற பல்வேறு களங்களில் ரிசர்ச் அசோசியேட் இன் விட்ரோ பயாலஜி, மார்க்கெட்டிங் மேனேஜர், ரிசர்ச் அனலைஸ்ட் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை இந்த கல்வி பெற்று தரும்.

  பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் இன் நியூட்ரிஷியன் (B.Sc in Nutrition)

  இந்த மூன்று ஆண்டு படிப்பு மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகளை கையாள்வதை பற்றி கற்று தருகின்றன. மனிதர்களில் வெவ்வேறு உணவு, உணவின் எதிர்வினைகளைப் புரிந்து கொள்ள பல்வேறு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை இந்த கல்வி மாணவர்களுக்கு விளக்குகிறது. தனிப்பட்ட நபர்களின் உடல் நிலைகள், ஒவ்வாமை போன்றவற்றை புரிந்துகொண்ட பிறகு, உடல்நலம் மற்றும் உணவுத் தேர்வுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த படிப்பை படிப்பவர்கள் ஊட்டச்சத்து நிபுணர், டயட்டீஷியன், ஃபுட் குவாலிட்டி மேனேஜர் உள்ளிட்ட பணிகளில் சேரலாம். மேற்கூறிய படிப்புகளுடன், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தகுதி பெறாமல் பின்வரும் படிப்புகளையும் படிக்கலாம். கீழே வழங்கப்பட்ட இளங்கலை திட்டங்களின் காலம் ஒன்றுக்கு ஒன்று மாறுபடும்.

  பேச்சுலர் ஆஃப் பிசியோதெரபி (Bachelor of Physiotherapy), பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் இன் கார்டியாக் பெர்ஃப்யூஷன் (B.Sc in Cardiac Perfusion), பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் இன் கார்டியோவஸ்குலர் டெக்னாலஜி ( B.Sc in Cardiovascular Technology), பேச்சுலர் ஆஃப் ஆக்குபேஷனல் தெரபி (Bachelor of Occupational Therapy).

   
  Published by:Vijay R
  First published: