MBBS, BDS மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..

MBBS, BDS மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..

கோப்பு படம்

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரு விளையாட்டு அரங்கில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
    தமிழகத்தில் 26 அரசு மற்றும் 15 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், அரசு ஒதுக்கீட்டிற்கு 23707 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 276 விண்ணபங்களும் ஏற்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 313 எம்பிபிஎஸ் இடங்கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    இதைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நேரு விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். முதலில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கலந்தாய்வும், அதன்பின் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது தினமும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாணவருடன் வர ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். எந்த தேதி, நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டும் என எஸ்.எம்.எஸ் வாயிலாகவும், இணையதளத்திலும் தகவல் தெரிவிக்கப்படும். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் காத்திருப்பதற்காக விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கலந்தாய்வு செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரி பேருந்துகள் இயக்கப்படும். கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தில் 7 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அமர்ந்து கலந்தாய்வு குறித்த தகவல்களை நேரடியாக தெரிந்துகொள்வதற்காக 24 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க...அமித்ஷா வருகை.. மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை



    கலந்தாய்வு அலுவலருக்கும், மாணவருக்கும் இடையே ஒவ்வொரு மேஜையிலும் கண்ணாடி திரை வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு அறைக்கு அழைத்து செல்வதற்காக இரண்டு பேட்டரி வாகனங்களும், 12 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published: