மருத்துவ இளைநிலை படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, அனுமதி கிடைத்த பிறகு மருத்துவக் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இதற்காக, கடந்த நவம்பர் 3 முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியலை இன்று காலை 10 மணிக்கு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிடுகிறார்.
தமிழகத்தில் மொத்தம் 5,550 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதம் உள்ள 4,043 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ளன. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,650 எம்.பி.பி.எஸ். இடங்களில், 227 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அதேபோன்று 14 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,949 எம்.பி.பி.எஸ் இடங்களில், 77 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அத்துடன், இரு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 180 இடங்களில், 11 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும்,
18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களில், 91 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன. 7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 395 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
கொரோனா காரணமாக வழக்கமாக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பதில், இந்த ஆண்டு, வேறு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடு ஏதும் ஏற்படாதவாறு மாணவர்களின் கை ரேகை, விழித்திரை பதிவுடன் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
மேலும் படிக்க...தடையை மீறி பட்டாசு கடை வைத்தவர் கைது: தந்தையை விடுவிக்குமாறு கதறிய சிறுமி- இனிப்புகள் வழங்கி சமாதானம் செய்த போலீஸ்
மேலும், வருகின்ற டிசம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Medical education, Medical seat, Minister Vijayabaskar