அகிலஇந்திய ஒதுக்கீடு / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்காண இடங்கள் / மத்திய பல்கலைக்கழகங்கள் / இஎஸ்ஐசி /எய்ம்ஸ் / ஜிப்மர் / எஎப்எம்எஸ் உள்ளிட்டவையில் உள்ள மருத்துவ இடங்களுக்கான முதல் சுற்று கவுன்சலிங் ஜனவரி 19 இன்று தொடங்கி 28 ஜனவரி வரை நடைபெற உள்ளது.
முதல் சுற்று கவுன்சிலிங் மூலம் இடம்பெற்ற மாணவர்களுக்கான கடைசி சேர்க்கை தேதி பிப்ரவரி 4 2022. மேலும் இரண்டாவது சுற்று கவுன்சிலிங் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 18 வரை நடைபெற உள்ளது, இரண்டாவது சுற்று கவுன்சிலிங் மூலம் இடம்பெற்ற மாணவர்கள் சேர்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 26 ஆகும்.
MOP - UP சுற்று வருகின்ற மார்ச் 2 தொடங்கி மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்தச் சுற்றில்இடம் கிடைத்த மாணவர்கள் செர்வதற்கான கடைசி தேதி மார்ச் 19 ஆகும்.
Also Read : 28 ஆண்டுக்குப் பிறகு.. ஆண்கள் வசம் வந்த திருச்சி மாநகராட்சி
மூன்று சுற்று கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் Online Stray கவுன்சிலிங் முறை மூலம் நிரப்பப்படுகிறது. இவை அகிலஇந்திய ஒதுக்கீடு / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்காண இடங்கள் / மத்திய பல்கலைக்கழகங்கள் / இஎஸ்ஐசி /எய்ம்ஸ் / ஜிப்மர் ( காரைக்கால் மற்றும் புதுச்சேரி) இடங்களில் நிரப்பப்படும்.
இந்த இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் 21 மற்றும் 22 மார்ச் ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. மேலும் சேர்வதற்கான கடைசி தேதியாக மார்ச் 26 ஆக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.